beauty

Monday, 4 November 2013

juice health tips

  tips for hypertenion ,health tips ,


பீட்ரூட் ஜூஸ் குடித்தால் 

'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

 குடை நல்லது... எப்படின்னுகேட்கிறீங்க தானே?

umbrella,

மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது. umbrella uv rays tips

No comments:

Post a Comment