Don't tension be cool,relax please
The skull is a problem for us, so it etti vantatunna an hour will start to ache. Then one day the whole veccirunta marattutum dysfunctional brain. Do you have any reason to throw a orama katacitunka vantuticcinna issue. That will be fine. Okay? "
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
"இது எவ்வளவு வெயிட் இருக்கும்?"
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
"இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல"
வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?"
"ஒண்ணுமே ஆகாது சார்"
"வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?"
"உங்க கை வலிக்கும் சார்"
"ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…"
"உங்க கை அப்படியே மரத்துடும் சார்"
"வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?"
"இல்லை சார். அது வந்து…"
"எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?"
"கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்"
"எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?"
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு

No comments:
Post a Comment